Header Ads



ஏனைய நாடுகளுக்கும் குரங்குகள் தேவையா..? ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவு


குரங்குகளால் இந்நாட்டில் பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்படுவதால், சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு 100,000,000 குரங்குகளை வழங்குவதற்கு அமைச்சரவையில் எவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது.


சீனாவிற்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பான சட்ட நிலைமைகள் தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் அறிவித்துள்ளார்.


இந்த நாட்டில் குரங்குகளின் தொகையை குறைப்பதற்கு, குரங்குகளால் பயிர்களுக்கு கடும் சேதம் ஏற்படுவதால், அதனைக் குறைப்பதற்கு துரிதமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய நாடுகளின் மிருகக்காட்சிசாலைகளுக்கும் குரங்குகள் தேவையா என ஆராயுமாறு அமைச்சரவையின் அமைச்சர்கள் பலரும் விவசாய அமைச்சருக்கு அறிவித்துள்ளனர்.


குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பான சட்ட நிபந்தனைகளை ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.