Header Ads



இலங்கையை மீண்டும் தண்டிக்கிறது பீபா - 2 புதிய தீர்மானங்களை அறிவித்தது


இரண்டு சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து இலங்கை தேசிய கால்பந்து அணியை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.


2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆடவர் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகளான ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியில் இருந்தும் மற்றும் 23 வயதுக்குட்பட்ட ஆசியக் கால்பந்தாட்டப் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இருந்தும் இலங்கை அணி நீக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்வதற்கான தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்றுவிப்பாளரும் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.