தலையணைக்குள் மறைந்து வைத்திருந்த 15 லட்சம் ரூபா பணத்தை காணவில்லை
இது தொடர்பில் குறித்த பெண் நேற்று (04-04-2023) வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நிலத்தை விற்று கிடைத்த தொகையின் ஒரு பகுதியான இந்தத் தொகையை அவர் வங்கியில் வைப்புச் செய்திருந்தார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் முடங்குமென சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவலை பார்த்துள்ளார்.
இதனால் பணம் தனக்கு கிடைக்காமல் போய்விடும் என அச்சமடைந்தவர், கடந்த ஜனவரி மாதம் ஒரு நாள் கணக்கில் இருந்த பணத்தை தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தான் கொண்டு வந்த பணத்தாள்களை தலையணைக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைத்ததாக அவர் கூறியதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த தலையணையை தலையில் வைத்துக்கொண்டு தான் தூங்குவதாகவும், தலையணைக்குள் பணம் இருப்பது கணவருக்கோ, வேறு யாருக்குமோ தெரியாது என்றும் அவர் பொலிஸாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
தலையணையில் மறைத்து வைத்திருந்த பணத்தை யார் திருடியது என்று நினைத்துக்கூட பார்க்க முடியாமலுள்ளதாக அவர் கூதுவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நேற்று முன்தினம் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து படுக்கையறைக்கு சென்றபோது, பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலையணை கிழிந்து போர்வை சிதறி கிடந்ததை பார்த்தார்.
இந்நிலையில் தலையணையில் பணம் இல்லாததை பார்த்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
Post a Comment