Header Ads



அதிரடிக்கு திட்டமிட்ட ஹர்ச, சூழ்ச்சி செய்த அரசாங்கம் - அம்பலப்படுத்திய சஜித்


பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவர் நிலையில் இருந்து ஹர்ச டி சில்வாவை தவிர்த்தமைக்கான காரணத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.


முன்னதாக இந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்த ஹர்ச டி சில்வா, பாராளுமன்ற கூட்டத்தொடர், ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் குழுவின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.


எனினும், குறித்த குழுவின் பெரும்பான்மையைக் கொண்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், மயந்த திசாநாயக்கவை குழுவின் தலைவராக பரிந்துரைத்து அவரை குழுவின் தலைவராக்கினர்.


இந்தநிலையில், உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதி பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஏன் அதனை விடுவிக்கமுடியவில்லை என்ற கேள்வியை, நிதியமைச்சின் செயலாளரை அழைத்து வினவுவதற்கு ஹர்ச டி சில்வா திட்டமிட்டிருந்தார். இதன் காரணமாக, அவரை பொதுநிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு வருவதற்கு எதிராக அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டதாக சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.