சிறுவனை கத்தியால் குத்திய பிக்கு -
பிடிகல விகாரையின் தேரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் நேற்று (1) எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிடிகல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விகாரையில் தங்கியிருந்த மற்றும் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த பதின்மூன்று வயது சிறுவனே காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் வலது காலில் கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலின் பின்னர், காயமடைந்த சிறுவன் தல்கஸ்வல, கல்லிட கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக விகாரையில் வசிக்கும் இரண்டு தேரர்களால் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நேற்று (1) இரவு 11 மணியளவில் எல்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தேரரைக் கைது செய்யவில்லை எனவும், அவர் மதுபோதையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விகாரையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். IB
Post a Comment