உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள்
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை, சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment