Header Ads



கண்ணீர் விட்டழுத யானை, மனிதர்களும் கண்கலங்கினர் - இலங்கையில் நெகிழ்ச்சி


மனிதர்களை மனி்தர்களாக மதிக்க தவறும் நிலையில், யானை ஒன்றின் செயற்பாடு பலரை கண்கலங்க வைத்துள்ளது.


இது தொடர்பில் இணையத்தில் காணொளி ஒன்று வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தம்புள்ளை - கண்டலம பிரதேசத்தில் நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.


தனக்கு உணவு, நீர் வழங்கிய எஜமானின் இழப்பினை தாங்கிக் கொள்ள முடியாத யானை கண்ணீர் விட்டு அழுதுள்ளது.


உயிரிழந்த நபருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக யானை சென்றுள்ள நிலையில் மண்டியிட்டு அஞ்சலியை செலுத்தியுள்ளது.


அத்துடன் உயிரிழந்தவரின் உறவினர்களின் கைகளை பிடித்து யானை சோகத்துடன் தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், அங்கிருந்து சென்றுள்ளது.


ஐந்து அறிவு படைந்த யானையின் இந்த செயற்பாடு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

No comments

Powered by Blogger.