Header Ads



கனடாத் தூதுவரையும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியையும் சந்தித்து சஜித் பேசிய விடயங்கள்


இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (16) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.


இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள்  தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, குறிப்பாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டவாக்கம் நிறைவேற்றதிகாரம் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிலும்  நிலவும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் செயல்முறையை ஜனநாயகமயமாக்கல் போன்ற விடயங்களும் இங்கு கருத்திற் கொள்ளப்பட்டன.


2


ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(16) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.


ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தேர்தல்களை நடாத்துவதன் ஊடாக இந்நாட்டு மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முகமாக ஐநாவின் கூடிய ஈடுபாட்டின் அவசியத்தையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.



No comments

Powered by Blogger.