Header Ads



சாரதிகளே கவனம்


- சுதத் எச். எம். ஹேவா -


மலையத்தில் மாலை வேளைகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வீதிகளில் பல்வேறு வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு எச்சரித்துள்ளது.


மழை காரணமாக ஹட்டன் வீதிகள் வழுக்கும் தன்மையில் உள்ளதால் அவ்வீதிகளில் பல்வேறு வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக  ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த நிலைமைகள் தொடர்பில் சகல சாரதிகளும் அவதானம் செலுத்தி, இவ்வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது மிகவும் அவதானமாக செலுத்த வேண்டுமென அதிகாரி மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவளை, வட்டவளை, ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹட்டன் - நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளேயர், தலவாக்கலை, ரதெல்ல, நானுஓயா உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுகின்றன.


எனவே, இவ்வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.