Header Ads



முன்ளாள் ஆளுநர் கொந்தளிப்பு


எரிபொருள் விநியோகத்துக்கான கியூஆர் (QR) குறியீட்டு முறையை இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023க்கு இடையில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சியானது கடுமையான பொருளாதாரச் சுருக்கத்தைப் பிரதிபலிக்கிறது.


இதனால், தேசிய எரிபொருள் உரிமத்தின் மூலம் வழங்கப்படும் எரிபொருளை ரேஷன் முறையிலும் மக்கள் வாங்க முடியாது.


இந்தநிலையில், இனியும் எரிபொருள் உரிம முறையை நடைமுறைப்படுத்துவது வீண் செயலாகும். டீசல் பயன்பாடு 54 சதவீதம், பெட்ரோல் பயன்பாடு 35 சதவீதம், மண்ணெண்ணெய் பயன்பாடு 75 சதவீதம் குறைந்துள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.