Header Ads



சிரியாவில் அமெரிக்கா தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு, ஈரானுடன் போரை நடத்த விரும்பவில்லை - பைடன்


சிரியாவில் 19 பேரின் உயிர்களை காவுகொண்ட அமெரிக்காவின் தாக்குதலுக்கு சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.


தமது படைகளே ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இந்த கண்டனத்தை இரண்டு நாடுகளும் தெரிவித்துள்ளன.


ஈராக்குடனான எல்லையிலுள்ள சிரியாவின் மூலோபாய நகரில் நடத்தப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் இரண்டு வெளிவிவகார அமைச்சுகளும் வன்மையாக கண்டித்துள்ளன.


அமெரிக்காவின் "பயங்கரவாத" தாக்குதல்கள் பொதுமக்களின் இலக்குகளைத் தாக்கியுள்ளதுடன், சர்வதேச சட்டம் மற்றும் சிரிய இறையாண்மையை மீறுவதாக அமைந்தது என ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நாசர் கனானி கூறியுள்ளார்.


தாம் உருவாக்கிய ஐ.எஸ் ஆயுததாரிகளை எதிர்த்து போரிடுவதாக கூறிக்கொண்டு, சிரியாவை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா, அதன் எரிசக்தி வளம் மற்றும் கோதுமை உள்ளிட்ட செல்வங்களை கொள்ளையிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


சிரிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தமது நாட்டின் இராணுவ ஆலோசகர்கள் மாத்திரம் அங்கு செயற்படுவதாக நாசர் கனானி குறிப்பிட்டுள்ளார்.


ஈரானில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையானது, சிரியாவில் கணிசமான இராணுவ பிரசன்னத்தைக் கொண்டுள்ளது என்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்துள்ளார்.


இதனிடையே அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் மிருகத்தனமானவை எனவும் பிராந்தியத்தின் ஒருமைப்பாட்டை மீறும் வகையில் உள்ளதாகவும் சிரியாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டவருவதாகவும் சிரிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.


சிரியாவில் அமெரிக்க ஒப்பந்தகாரர் ஒருவர் கொல்லப்பட்டு ஒருவாரத்தின் பின்னர் இந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ள நிலையில், தாம் ஈரானுடன் போரை நடத்த விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.


தமது மக்களை பாதுகாப்பதற்காக வலுவாக செயற்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேலும் சுட்டிக்காட்டியுள்யுள்ளார். 


No comments

Powered by Blogger.