Header Ads



வங்கியிலிருந்து வரும் அழைப்பு - சுவிட்சர்லாந்து மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி


சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு புதிய மோசடி தலைகாட்டத் துவங்கியுள்ளது. அதாவது, வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறும் ஒருவர், உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து யாரோ பணம் எடுத்துள்ளார்கள் என்னும் செய்தியை வாடிக்கையாளர்களிடம் கூறுகின்றனர்.


அந்த நபரின் பதற்றத்தைப் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் வங்கி அட்டை ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும், உங்கள் ஒரிஜினல் அட்டையைக் கையளிக்கவேண்டும் என்றும் கேட்கின்றனர். அத்துடன், PIN எண்ணையும் அவர்கள் கேட்கின்றனர்.


சொன்னதுபோலவே, ஒரு டெக்சி சாரதி வங்கி அட்டையைப் பெற்றுக்கொள்ள வருகிறார்.


இந்த விடயம் பொலிசுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக, தாங்களே பொலிசாருக்கு புகாரளித்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் தொலைபேசியில் அழைக்கும் வங்கி அலுவலராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் மோசடி நபர்.


இப்படி ஒரு மோசடி சுவிட்சர்லாந்தில் தலைகாட்டத் துவங்கியுள்ளது என்று எச்சரிக்கும் பொலிசார், யாரிடமும் தங்கள் வங்கி அட்டையைக் கொடுக்கவேண்டாம் என்றும், தங்கள் PIN எண்ணை யாரிடமும் தெரிவிக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதுடன், வங்கியோ, பொலிசாரோ, அவற்றைக் கேட்பதில்லை என்றும் கூறியுள்ளனர்.  

No comments

Powered by Blogger.