Header Ads



குவைத் விளையாட்டுப் போட்டிகளில் மாவனல்லை ஸாஹிரா பழைய மாணவர்கள் சங்க அணி முதலாமிடம்


குவைத் வாழ் இலங்கையர்களின் சங்கமான SLK  வருடாந்தம் நடாத்தும் 'Independence trophy -Cricket Tournament -2023' போட்டியில் இம்முறை மாவனல்லை ஸாஹிரா பழைய மாணவர்கள் சங்க அணி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த வருடமும் இதே போட்டியில் இரண்டாம் இடத்தைப் (Runners up) பெற்றுக்கொண்டது  என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய பரிசளிப்பு நிகழ்ச்சியின் பிரதம அதிதி குவைத்துக்கான கௌரவ இலங்கைத் தூதுவர் காந்தீபன் பாலசுப்ரமணியம் அவர்களிடம் இருந்து மாவனல்லை ஸாஹிரா பழைய மாணவர்கள் சங்க அணி அதற்கான வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வுக்கு குவைத்தில் இருக்கும் பல விளையாட்டுக்கு கழகங்களும் ,குவைத் வாழ் இலங்கையர்களது சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் குடும்பங்கள் சகிதம் கலந்து சிறப்பித்திருந்தனர்.


மாவனல்லை ஸாஹிரா பழைய மாணவர்கள் சங்கம், குவைத் நாட்டில் கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளை மாணவர்களுக்கு மத்தியில் ஆர்வமூட்டும் வகையில் கடந்த பல வருடங்களாக பல விதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.  


ஹரீஸ் ஸாலிஹ் 



No comments

Powered by Blogger.