Header Ads



ரணில், சந்திரிகா கட்சிகள் இணைந்து போட்டி - மைத்திரிபாலவின் அரசியல் வாழ்க்கையை அழிக்க சதி


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்தினால், அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


கட்சியின் தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உருவாக்கிய அரசாங்கத்தின் ஆலோசகராக செயற்படும் சந்திரிகா பண்டாரநாயக்க மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கையை அழிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் தேர்தலில் ரணில், சந்திரிகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட தயாராகி வரும் நிலையில், மேற்குலக சார்பற்ற இடதுசாரி சக்தியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பங்களிப்புடன் உருவாக்கப்போவதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.tw

1 comment:

  1. சந்திரிகாவின் குடும்பக் கட்சியை மைதிரி பலாத்காரமாகப் பறித்தெடுத்து சிரிலங்கா சுதந்திரக்கட்சி அமைக்க துணைபோனவர் தான் இந்த பாடகன் தயாசிரி ஜயகேசகர, பொய்யையும் போலியையும் உண்மையாக நம்பவைத்து மக்களை ஏமாற்றும் தொழில் செய்யும் இவர்களுக்கு சந்திரிகா யார் என்பது தெரியாது. அன்று மஹிந்தவும் அவருடைய அடிவருடிகளும் தேர்தல் முடிவுகளை மறுபக்கம் புரட்டி பலாத்காரமாக ஆட்சியை அமைக்க எத்தனித்த மஹிந்தவின் சூழ்ச்சியை முறியடிக்க ரணிலால் முடியவில்லை. அப்போது சந்திரிகா அமெரிக்க ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு மஹிந்தவை எச்சரித்தபின்னர் தான் மஹிந்தவை அடக்க முடிந்தது. அந்த அத்தனை கைங்கரியங்களையும் திட்டமிட்டு நடாத்தி ரணிலுக்கு ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்தவர் தான் சந்திரிகா, இனி ரணில் சந்திரிகாவுடன் இணைவதில் எந்த ஆச்சரியுமும் இல்லை. இங்கு பேய்ப்பயம் மைத்திரிக்கும் ஜயசேகரவுக்கும் தான். அவர்களின் பதவிகள் பறிபோகும் காலம் மிக அண்மையில் இருப்பதுதான் அதன் இரகசியம். ரணிலும் சந்திரிகாவும் ஒன்றிணைந்தால் மஹிந்த, பஸிலின் ஆட்டத்துக்கு முடிவுகட்ட முடியும். அந்த இலக்கை அடைய இருவரும் ஒன்றிணையக்கூடும்.அது சிலவேளை நல்லதொரு மக்களுக்குச் சார்பாக ஆட்சியை அமைக்க வழிவகுக்கலாம். எனவே எதிர்காலத்தில் நன்மை நடக்கும் என எதிர்பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.