Header Ads



பட்டாசுக்கு அஞ்சும் ஹிருணிகாவின், வீட்டுக்குச் சென்ற 4 JVP யினருக்கு நடந்த திடுக்கிடும் கதை


கடந்த 1989 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் துப்பாக்கிகளுடன் தமது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.


அந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு வீட்டுக்குள் புகுந்தால், அங்குள்ள அனைவரையும் கொலை செய்வார்கள் எனவும் எனினும் முதல் முறையாக தமது வீட்டுக்குள் வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் கொலை செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே ஹிருணிகா இதனை தெரிவித்து்ளளார்.


இளம் தலைமுறையினர் ஜே.வி.பி பக்கம் செல்வதாக பேசப்படுகிறது. எனக்கு தற்போது 35 வயது, எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது ஜே.வி.பியினர் எனது தந்தையை கொலை செய்ய வந்தனர்.


இந்த சம்பவம் 1989 அல்லது 88 ஆம் ஆண்டு நடந்தது என நினைக்கின்றேன். இரண்டு வயது என்பதால், எனக்கு பெரிதாக ஞாபகமில்லை. இரவு நேரத்தில் கொலன்னாவையில் உள்ள எங்களது வீட்டுக்கு ஜே.வி.பியை சேர்ந்த நான்கு பேர் வந்தனர்.


தொலைக்காட்சியில் நாடகம் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த போது, வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. எனது தந்தையை லக்கி அய்யோ என்று தான் அழைப்பார்கள். அன்று ஒரு இளைஞன் கதவை தட்டி லக்கி அய்யே லக்கி அய்யே என்று கூப்பிட்டார்.


எனது பாட்டனார் கதவை திறந்த போது துப்பாக்கி முனையில் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தனர். நான் எனது தந்தையின் மடியில் அமர்ந்து இருந்தேன்.


துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படலாம் என்று எனது தந்தை என் மீது துப்பாக்கி சூடு படாத படி என்னை மறைத்து்ககொண்டிருந்தாக எனது அம்மா கூறினார்.


பொதுவாக அந்த காலத்தில் ஜே.வி.பியினர் ஒரு வீட்டுக்குள் புகுந்தால், வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விட்டேன வெளியில் வருவார்கள்.


இலங்கையில் முதல் முறையாக எனது தந்தையை கொலை செய்ய வந்த ஜே.வி.பியினருடன் வீட்டில் இருந்தவர்கள் மோதியதுடன் வீட்டுக்குள் வந்த ஜே.வி.பியினர் நால்வரும் கொல்லப்பட்டனர்.


அந்த வரலாறு மிக கொடூரமானது. அப்போது எனக்கு இரண்டு வயது, சிறிய பிள்ளையின் மனது எந்த அளவுக்கு மென்மையானது என்பதையே நான் கூற வருகிறேன்.


நான் இங்கு வரும் போது தம்பி ஒருவர் பட்டாசு வெடிக்க முயற்சித்தார், நான் செல்லும் வரை பொறுங்கள் என நான் அவரிடம் கூறினேன். வெடி சத்தம் காரணமாக அன்று எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியின் வெளிபாடே இது.


பட்டாசு சத்தம் போன்ற பெரிய வெடி சத்தங்களை என்னால், கேட்க முடியாது. வெடி சத்தம் கேட்கும் போது எனக்கு இப்படி இருக்கும் போது, அந்த காலத்தில் தமக்கு எதிரில் கொல்லப்பட்ட தமது பெற்றோர் தொடர்பில் தற்போதுள்ள இளைஞர்களுக்கு எப்படியான மனநிலை இருக்கும் என எண்ணிப்பாருகள்.


எந்த கட்சியும் வரலாற்றில் தவறுகளை செய்திருக்கலாம். எமது கட்சி தவறு செய்தது என்பதை ஏற்றுக்கொள்ளும் போதே அந்த கட்சி மற்றும் அதன் தலைவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்.


செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டால், எவருக்கும் மக்கள் மன்னிப்பை வழங்குவார்கள் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.