Header Ads



ஆளும் கட்சியின் தன்னிச்சையான முடிவு, எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்


இன்று -18-மாலை பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவர ஆளும் கட்சி தீர்மானித்துள்ளதோடு, இந்த தன்னிச்சையான முடிவுக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வருவதோடு, அதற்கு தலைமை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


இதனை ஒரு மாத காலத்திற்கு நீடிக்க நீதி அமைச்சர் நேற்று தீர்மானித்திருந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


இதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளையும்,மக்களின் இறைமையையும் மீறும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும்,தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் தன்னிச்சையான நடவடிக்கைகளின் மற்றுமொரு நீட்சி என இதை கூறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


இன்று(18) பிற்பகல் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.