Header Ads



பாராளுமன்றில் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில், மெத்தை, கதிரைகள் - கொந்தளித்த எதிர்க்கட்சி


தனியார் நிறுவனம் ஒன்றினால் , நாடாளுமன்றில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில் , மெத்தை மற்றும் கதிரைகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக இன்று -09- நாடாளுமன்றில் தகவல் வெளியிடப்பட்டது . 


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இந்த விடயத்தை வெளிப்படுத்தினார் . இது தொடர்பான ரசீதுகளை சபையில் சமர்ப்பித்த அவர் , 3 லட்சத்து 42 ஆயிரம் பெறுமதியான இரட்டையர் கட்டில் மற்றும் மெத்தையும் , 273 ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகளும் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டதாக குறிப்பிட்டார் . 


இந்த பொருட்கள் எதற்காக கொண்டு வரப்பட்டன ? என்பது தொடர்பாகவும் , தனியார் நிறுவனம் ஒன்று ஏன் இந்த பொருட்களை கொள்வனவு செய்து எடுத்து வந்தது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புத்திக பத்திரன கேட்டுக்கொண்டார் . 


இதேவேளை இந்த பொருட்களை எடுத்து வந்த நிறுவனத்துக்கு எம்பிலிபிட்டிய பகுதியில் 20 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே குறிப்பிட்டார் . 


இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் , சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்தார்

1 comment:

  1. இதைத்தான் சிங்களத்தில் பின்வருமாறு கூறுவார்கள். නඩත් හාමදුරැවන්ගේ බඩ්ත් හාමදුරැවන්ගේ

    ReplyDelete

Powered by Blogger.