Header Ads



சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானி ரத்துச் செய்யப்படும்


சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை இரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் சபையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய போது மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,  


இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை  மூன்று வருடங்களுக்கு பின்னர், நடைமுறைப்படுத்துமாறு தான் விடுத்த கோரிக்கையை, நீதி கல்விச் சபை நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


எனினும் முன்னர் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியை பாராளுமன்றத்தின்  ஊடாக ரத்துச்செய்ய முடியும் என்றும் அதற்கிணங்க, வர்த்தமானியை  இரத்துச்செய்யும் வகையில்  அடுத்த வாரம் யோசனை ஒன்றை முவைக்கவுள்ளதாகக் தெரிவித்தார்.


எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைக்கு இணங்கவே இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை இரத்துச் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.