Header Ads



கோட்டாபய இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்துவிட்டு தற்போது அவதிப்படுகிறார், அவர் பீதியடைந்திருக்கக் கூடாது


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை பொதுமக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்து விட்டு தற்போது அவதிப்பட்டு வருகிறார் என   முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.


தனியார் ஊடகம் ஒன்றுடனான நிகழ்ச்சியில் பேசிய பசில் ராஜபக்ச, 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களுக்காக தியாகம் செய்ததாகவும், ஆனால் அதன் விளைவாக துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறினார்.


மேலும், “இதேபோன்ற தியாகத்தை நீங்களும் செய்வீர்களா?” என வினவிய போது, அதற்கு பதிலளித்த பசில், 


“அந்த நேரத்தில் தேவை ஏற்பட்டால் எனது இரட்டை குடியுரிமையை கைவிடுவேன். எனினும், தற்போது அவ்வாறான தேவை இல்லை” என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.


மேலும், முன்னாள் ஜனாதிபதி பீதி அடையாமல் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்திருக்க முடியும் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.  TM

1 comment:

  1. நாட்டை ஏற்கனவே அழித்துக் கொண்டிருக்கும் இந்த புற்றுநோயை இல்லாமல் செய்யுமாறு வேண்டினார்கள். அதன் விளைவாக கோதா அகற்றப்பட்டார். ஆனால் அந்த புற்றுநோய் அறிகுறிகள் இந்த சனாதிபதியின் கீழ் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இதற்கு தீர்வு பொதுமக்கள் கையில்தான் இருக்கின்றது. அவர்கள் தீர்வை எவ்வாறு முன்வைக்கப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.