Header Ads



உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று - சந்திரிக்கா


 உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


நாட்டைக் கட்டியெழுப்ப இளைஞர்களின் தலைமை தேவை. போராட்டத்தின் செய்தியை என்றும் மறக்க மாட்டோம். இந்த இளைஞர் போராட்டம் நமது நாட்டில் மிகவும் முக்கியமான மற்றும் பெறுமதியான முன்னேற்றமாகும்.ஒரு வரலாற்று நிகழ்வாகும்.


இந்தப் போராட்டத்தை அப்படி இப்படியெல்லாம் நினைக்க வேண்டாம். ஒட்டுமொத்த நாட்டையே புரட்டிப் போட்ட இந்த சம்பவத்தை இப்போது மறக்க முயல்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். twin

1 comment:

  1. 26 டிசம்பர் அன்று இலங்கையில் சுனாமி வந்தபின் உலக மக்கள் பாதக்கப்பட்ட இலங்கையர்கள் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாக அவர்கள் முழு உலகிலிருந்தும் இலங்கைக்கு அனுப்பிய டொலர், யூரோ ட்ராப்கள், செக்குகள், கோடான கோடி ரூபா பெறுமதியானவை. அவை அனைத்தும் சனாதிபதி மாளிகையின் ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அவற்றை ஒருவகையிலும் மாற்றி பணத்தைக் கையாட முடியவில்லை. அப்போது அமைச்சராக இருந்த தம்பியிடம் தாத்தா கேட்டாராம். இந்த ட்ராப்டுகளைப் பணமாக்கித் தருவாயா எனக் கேட்ட போது என்னை உல்லாசப்பிரயாண அமைச்சராக நியமித்தால் அதைச் செய்வேன். உடனே அவர் ஓரிரவிலேயே உல்லாசப்பிரயாண அமைச்சராகிவிட்டாராம். அப்போது அனைத்து ட்ராப் பொதிகளும் வாகனத்தில் ஏற்றப்பட்டன. தாத்தாவின் கனவு நனவாகிவிட்டது என அந்த துறை சார்ந்தவர்கள் கண்டு கேட்டுக் கூறியதை இங்கு பதிவு செய்கின்றேன். அந்த நபர்களோ,அவர்கள் எங்கிருக்கின்றார்களோ எனக்குத் தெரியாது. இது அவர்கள் அங்கு பணிசெய்தபோது நடந்தாகவும் கூறினார்கள். அந்த தாத்தா தான் இப்போது உலகில் கொள்ளையடிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை 10 இடத்தில் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.