Header Ads



புதிய வகை கொரோனா, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் - மோடி


புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.


நாட்டில் பிஎப்.7 கொரோனா பரவி வரும் நிலையில், உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார்.


நாட்டில் குஜராத், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற இரண்டு திரிபு வகை கொரோனா இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் இந்த வகை கொரோனா பரவும் எனக் கூறப்படுகிறது.


இந்நிலையில், புதிய வகை கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆலோசனைக்குப் பிறகு பேசிய மோடி, கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


ஆக்சிஜன் கையிருப்பு, வென்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்க அறிவுறுத்திய அவர், மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.


முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

1 comment:

  1. பாருங்கள், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உபதேசத்தைப் பாருங்கள். சீனா, அமெரிக்காவில் கோவிட் திரிபுகளின் மாதிரிகள் வேகமாகப் பரவி, இந்தியாவில் இரண்டுபேர் பாதிக்கப்பட்ட போது உடனடியாக துறைபோன சுகாதார, ஏனைய தொடர்பாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்து எடுத்த முடிவை பொதுமக்களுக்கு அறிவிப்பதுடன் சிகிச்சையுடன் தொடர்புடைய உபகரணங்கள், மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார். இந்த பிரதமரின் செயல்முறை இலங்கை பிரதமருக்கு இருக்கின்றதா? அவர் எங்கே இருக்கின்றார் என்ன செய்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட தெரியாதாம். இனி எப்படி இந்த நாடு முன்னேறும். இந்த நாட்டின் அரசாங்கம் வழிகெட்டுப் போயிள்ளதுடன் அதைவிட பொதுமக்கள் வழிகேட்டை நோக்கி வெகுதூரம் சென்று விட்டனர். யார் யாரை வழிநடாத்துவது என்பது தான் மிகப் பெரிய பிரச்சினை.

    ReplyDelete

Powered by Blogger.