Header Ads



அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், 80 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் எடுக்காது


தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் பெரும்பான்மை ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இப்போதைய நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காது.


80 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் எடுக்காது. இருக்கின்ற மிகுதி இரண்டு வருடங்களுக்குள் ஏற்படும் சில மாற்றங்கள் இந்த எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.


கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய 69 இலட்ச வாக்குகளில் பெரும் பகுதி 'மொட்டு'க்கு எதிராகவே உள்ளது"என கூறியுள்ளார்.

1 comment:

  1. ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு அட்சரகம் கற்பிக்கின்றான் இந்த ஓட்டாண்டி. இந்த நாட்டில் பொதுமக்கள் அமைதியாக இருப்பதன் அர்த்தம் இவனுடைய கருத்துகளை ஏற்றுக் கொண்டார்கள் என இவனைப் போன்ற நபர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது உண்மையைச் சரியாக பொதுமக்களும் ஏனையவர்களும் அறிந்து கொள்ள ஒரே வழி தேர்தல் தான். ஆனால் தேர்தலையும் தொடர்ந்தும் ஒத்திப் போட்டுக் கொண்டு அரசியல்சட்டத்தை குப்பையில் போட்டு விட்டு ஆட்சியைத் தொடர்ந்தும் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் போக்கு தொடரும் போது அதற்கு கடவுள்தான் சரியான பதிலடியைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அந்த நிலைமைக்குச் செல்லும் ஆற்றலும்,அதிகாரமும் பொதுமக்களுக்கு இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.