Header Ads



3 கூட்டணிகளிடையே பேச்சுக்கள் தீவிரம், கண்டு கொள்ளப்படாத மைத்திரி


தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் செயல்பாடுகளின் போது, இணைந்து பணியாற்றுவதற்காக ஏற்கனவே அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் இணைந்து மூன்று பிரதான கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


எனினும் இந்த மூன்று கூட்டணிகளில் எந்த கூட்டணியிலும் இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணையவில்லை என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சில சிறுபான்மை கட்சிகள் இணைந்த கூட்டணி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி மேலும் சில கட்சிகள் இணைந்த கூட்டணி, அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, சில கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகள் இணைந்த கூட்டணி என மூன்று கூட்டணிகள் உருவாகப்பட்டுள்ளன.


இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் உருவாக்கும் கூட்டணிகளில் இணைய தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


ரணில் மற்றும் சஜித் ஆகிய தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது தமது கட்சிக்கு சம அளவிலான வேட்பாளர்கள் உட்பட பல கோரிக்கைகளை சுதந்திரக்கட்சி முன்வைத்ததாக கூறப்படுகிறது.


எனினும் எந்த கூட்டணியும் சுதந்திரக்கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரியவருகிறது. TM

No comments

Powered by Blogger.