Header Ads



கொலை செய்யப்பட்ட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் போது, மக்களுக்கு பெரியளவில் வேதனை ஏற்படும்


கொலை செய்யப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக வேதனையான முடிவுகளை எடுக்க நேரிட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ள காலத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அவ்வாறான முடிவுகளை எடுக்கும் போது பொதுமக்களுக்கு பெரியளவில் வேதனையான அனுபவம் ஏற்படும்.


பொருளாதார நெருக்கடியில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், மக்களுக்கு வாழ்க்கை செலவு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறைந்த வருமானத்தை பெறும் நபர்களே அதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


நாட்டின் வறுமை நிலைமை மேலும் மோசமடையும்.வறுமை கோடு மேலும் கீழ் நோக்கி செல்லும். வறியவர்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பு. அப்படி செய்யவில்லை என்றால், அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவது சிரமம்.


நாட்டில் அந்நிய செலாவணி நெருக்கடி இருக்கும் போது அனைத்தையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, கடந்த காலத்தை போல் ஆடம்பரமாக வாழ்வது சிரமம்.


பொருளாதாரம் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை தமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் நெருக்கடியில் இருந்து மீள முடியும் எனவும் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். tw

No comments

Powered by Blogger.