Header Ads



பாலியல் தொழிலுக்காக இலங்கைப் பெண்களை, வெளிநாட்டுக்கு அனுப்பும் 7 நிறுவனங்கள்


மிகப் பெரியளவில் முன்னெடுக்கப்படும் பாலியல் தொழில் சம்பந்தமாக மேலும் 7 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.


துபாய் மற்றும் ஓமான் போன்ற நாடுகளில் வேலைக்காக சென்று அந்நாடுகளில் அனாதரவாகி, பல்வேறு இன்னல்கள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சுமார் 50 பெண்கள்,இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அந்த பெண்களிடம் வாக்குமூலங்களை பெற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றவியல் விசாரணை திணைக்களம் கூறியுள்ளது.

1 comment:

  1. அபத்தமான செய்திகளை வௌியிட்டு பொதுமக்களை வழிகெடுக்கவேண்டாம். இலங்கையிலிருந்து செல்லும் எந்த பெண்ணும் விபச்சாரம் செய்யும் நோக்கோடு வௌிநாடு செல்வதில்லை. அவர்களின் அடிப்படைப்பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களுக்கும் குடும்த்தினர்,பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்க்ைகயை அமைத்துக் கொள்வதற்கே அவர்கள் வௌிநாடுகளில் தொழிலுக்குச் செலகின்றனர். துபாய், ஓமான் போன்ற நாடுகளின் இலங்கைத் தூதரகங்களை நெருங்கிச் செயல்படுவது போல் காட்டிக் கொண்டு அந்த காரியாலங்களுக்கு அடிக்கடி வரும் கயவர்கள் இருக்கின்றனர். அவர்கள் விபச்சார நெட்வேர்க்கின் அடியாட்கள். ஒரு பெண்ணை ஏமாற்றி அங்கு கொணடு போய் ஒப்படைத்தால் ஆளுக்கு ஐாயாரம் பத்தாயிரம் டொலர்கள் கைமாறும். இந்த கயவர்கள் தான் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இலங்கைத் தூதரங்களுக்கு வரும் பெண்களை ஆசைகாட்டி பல்வேறு பொய்களையும் பசப்பு வார்த்தைகளையும் காட்டி இந்தப் பெண்களை அழைத்துச்சென்று விபசார விடுதிகளில் ஒப்படைக்கப்பட்டால் அவர்களின் கதி அதோகதிகான். இந்தக் கயவர்கள் கூட்டம் பெரும்பாலும் கம்பனிகள், தொழில்வழங்குபவர்களின் அனுமதியின்றி வௌியில தொழில் செய்வதாக கூறிக்ெகாண்டு இந்த பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுகின்றனர். இந்த விபசார தொழிலுக்கு எந்த ஒரு தொழில் ஏஜன்டும் இலங்கையிலிருந்து பெண்களை அனுப்புவதில்லை. தூதரஙகளில் வேலை செய்து கிடைத்த பலவருட அனுபவங்கள் மூலமாக நான் அறிந்த தகவல்கள் தான் இவை.

    ReplyDelete

Powered by Blogger.