Header Ads



டொலர்களை கடலில் வீணடிக்கும் அரசாங்கம்


தாமதக் கட்டணங்களுக்காக அரசாங்கம் டொலர்களை வீணடிப்பதாக பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று 45 நாட்களுக்கும் மேலாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.


குறித்த கப்பலுக்கான தாமதக் கட்டணமாக பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளது.


டொலர்களை வீணடிக்க வேண்டாம் எனவும் நம் நாட்டில் டொலர்கள் இல்லாத நிலையில், தாமதக் கட்டணம் செலுத்தி கப்பலை நங்கூரமிடத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் குறித்த கச்சா எண்ணெய்யின் தரத்தில் பிரச்சினை இருப்பதாவும் இது தொடர்பாக அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.