Header Ads



மஹிந்த மீண்டும் விகாரைகளுக்கு சென்று மக்களை சந்தித்து புகைப்படம் எடுப்பது ஆரம்பம்


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசிக்கத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


அதற்கமைய, விகாரைகளுக்கு செல்லும் பயணங்களை மஹிந்த ஆரம்பித்துள்ளார். அத்துடன் அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.


அதற்கமைய, பெலியத்த, கலகம ஸ்ரீ ஷைலராம புராண விகாரைக்கு சென்ற முன்னாள் பிரதமர் விஹாராதிபதி தேரர் தலைமையிலான மகாசங்கத்தினரை நேரில் சந்தித்து ஆசி பெற நடவடிக்கை எடுத்துள்ளார்.


அப்போது விகாரைக்கு வந்திருந்த மக்களிடம் கலந்துரையாடல் மேற்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் முன்னாள் பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை சம்பவத்த அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகியிருந்தார். கடந்த 4 மாதங்களாக வெளிநடமாட்டங்களில் ஈடுபடாத மஹிந்த தவிர்த்திருந்தார். 


இந்நிலையில் அடுத்த தேர்தலை இலக்காக கொண்டு மஹிந்த மற்றும் அவரின் குழுவினர் பல்வேறு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



1 comment:

  1. இந்த நாட்டில் மோட மீஹரக் குணமுடைய மக்கள் இருக்கும் வரை மஹிந்த, அவருடைய அடிவருடிகளுக்கு மீண்டும் ஆட்சிக்கு வரலாம். அந்த முயற்சியை மஹிந்து பௌத்த விகாரைகளுக்குச் சென்று பொதுமக்களுடன் சிரித்து மகிழ்ந்து அவர்களின் வாக்குகளை உள்வாங்கும் சூழ்ச்சியை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. மக்களின் மடத்தனமும் கடுமையான ஞாபக மறதி போன்ற பொதுமக்களின் குறைபாடுகள்தான் மஹிந்த கூட்டத்தின் ஆயுதங்கள்.உலகில் இலங்கைக்கு நிகரான நாடு இலங்கை மாத்திரம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.