Header Ads



4 இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட திலினி - கை விலங்கிடப்படாதது ஏன்..?


கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி நீதிமன்ற உத்தரவுக்கமைய 4 இடங்களுக்கு இன்று -12- அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


கொழும்பு உலக வர்த்தக மையத்திலுள்ள திலினியின் அலுவலகத்தை சோதனையிடும் நோக்கில் அழைத்துச் செல்லப்பட்ட போது அவரது கைவிலங்குகள் கழற்றப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பொது இடங்களுக்கு அல்லது விசாரணைகளுக்கு அழைத்துச் ​செல்லும் போது கைவிலங்கு இட வேண்டியது அவசியமாகும்.


இந்நிலையில், திலினி பிரியமாலி விசாரணைக்கு இடையூறின்றி ஒத்துழைப்பு வழங்கியமையினால் அவரது கைவிலங்குகள் அகற்றப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி 250 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி மேற்கொண்டுள்ளமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.