Header Ads



இலங்கையின் வெற்றியும், மனோவின் வர்ணணையும்


"இந்தியா, இந்தியா" என்று ஒரு மானஸ்தர் அணி இருந்ததே அது எங்கே? ரோஹித் மட்டுமே கூலாக விளையாடினார். 

பொறுப்புகளை பகிர்ந்து டீம் ஆடவில்லை. அப்புறம் அவ்வளவுதான். கோலி வழமைக்கு மாறாக அடிக்கப்போய் நல்லா பாடம் படித்து கொண்டார்.  

நம்ம பசங்கள் தூள், ஏனென்றால் பலரும் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு டீம் ஆட்டம் ஆடினார்கள்.  

பதும், குசல், 97 வரை வெளுத்து கொடுக்க அப்புறம், பானுக, சானுக கொளுத்தி போட்டார்கள், ஆனால் நிதானமாக...  அப்புறம் வரலாறு. 

இடையில் கொஞ்சம் விக்கட்கள் விழ கொஞ்சம் டென்சன் தந்தும் விறுவிறுத்தார்கள். 

வர்ணணையாளர்கள் இலங்கையின் நெருக்கடி நிலை பற்றியும் அவ்வப்போது சாடைமாடையாக சொன்னார்கள். இந்த வெற்றியின் பின்னர் இப்படியே நெருக்கடியில் இருந்தும் இலங்கை எழுந்து வரும் என சொன்னார்களா என தெரியவில்லை.   

அந்த கடைசி ஐந்தாம் பந்தில் ரன் அவுட்டுக்கு அவசரப்படாமல் விட்டிருந்தால், கடைசி பந்துவரை ஆட்டம் இன்னமும் விறு விறுப்பாகி இருக்கும். 

ஆனால், கடைசி வரை வந்தோம் என் இந்தியா சப்பைகட்டு கட்ட முடியாது, டி20 என்றால் அப்படிதான். எப்படியும் இந்திய அணிக்கு சொந்த ஊரில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.!   🤣🤣🤣

திருவிழாவில், அரோகரா கோஷத்துக்கு மத்தியில் திருடன் சங்கிலி அறுத்து ஓடுவதை போல், இந்த வெற்றி கோஷாவுக்கு இடையில் ரணில் அத்தியாவசிய பண்ட விலையை ஏற்றி விட கூடாது. 

அப்புறம், இலங்கை அணி கடைசி பந்துவரை எழுந்து வந்து வென்றது போல், நாமும் மீண்டெழுந்து வருவோம் என ராஜபக்சர் வசனம் பேசிவிடவும் கூடாது. (போதாதுக்கு நம்ம பானுக’வின் கடைசி பெயர் ராஜபக்ச..!)

Mano Ganesan Mp

1 comment:

  1. உங்கட உள்மனதிலுள்ள இந்திய பற்று எல்லோருக்கும் தெரியும்.சும்மா நடிக்காதடா

    ReplyDelete

Powered by Blogger.