Header Ads



கடன் வழங்க IMF இணக்கம் - ஆரம்பநிலை ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டதாக அறிவிப்பு


நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கான அவசரகால கடனொன்றுக்கு இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும் (ஐ.எம்.எஃப்) வந்துள்ளதுடன், உத்தியோகபூர்வமான அறிவிப்பானது நாளை விடுக்கப்படுமென இவ்விடயம் குறித்து நேரடியாக அறிந்த நான்கு தகவல் மூலங்கள் தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


70க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தனது மோசமான பொருளாதார நெருக்கடியால் தடுமாறும் கடனைச் சுமையாகக் கொண்டுள்ள இலங்கை, நாணய நிதியத்திடமிருந்து மூன்று பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கோரியிருந்தது.


அடிப்படைப் பொருள்களுக்குத் தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்வதுடன், விலைகள் மாதக்கணக்காக உயர்வடைந்துள்ளன.


இந்நிலையில், தம்மை அடையாளங்காட்ட விரும்பாத குறித்த தகவல் மூலங்கள் இலங்கை எவ்வளவு தொகையைப் பெறும் எனத் தெரிவித்திருக்கவில்லை.


இலங்கைக்கு ஒரு வாரத்துக்குள் மேலாக விஜயம் மேற்கொண்டுள்ள நாணய நிதியத்தின் அணி இலங்கையிலிருப்பதை மேலும் ஒரு நாளால் நீடித்துள்ளதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நீடிப்பதாலேயே இந்த நீடிப்பு என்பதுடன், நாளை ஊடக அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


வழமையாக பணியாளர் மட்ட ஒப்பந்தங்களின் கருத்தானது நாணய நிதியத்தின் முகாமைத்துவம், நிறைவேற்றுப் பணிப்பாளர் சபையின் இணக்கமாகவே கருதப்படுவது வழமையாகும். இதையடுத்தே நாடுகள் நிதியைப் பெறும்.

No comments

Powered by Blogger.