Header Ads



அமைச்சர் நசீருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கிய விவகாரம் - நாமல் வழங்கியுள்ள விளக்கம்


தனி நபர்களுக்கு பல சிபாரிசு கடிதங்களை வழங்கியுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கடிதம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமட்க்கு நாமல் ராஜபக்ஷ வழங்கிய பரிந்துரை கடிதத்தின் நகல் வெளியானதை அடுத்து சமூக ஊடகங்களில் அது பேசு பொருளாக மாறியுள்ளது.


புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் துணை நிறுவனமான ஜிஎஸ்எம்பி டெக்னிக்கல் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக தங்காலையைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறு நாமல் ராஜபக்ஷ அமைச்சரிடம் கோரியதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சரின் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.


தாம் ஒரு பரிந்துரையை மாத்திரமே முன்வைத்துள்ளதாகவும், கடந்த காலங்களிலும் இது போன்ற பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


“இறுதி முடிவு அமைச்சரின் கையில் உள்ளது, நான் அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொது நாள் கூட்டத்தின் போது பலர் தன்னிடம் சிபாரிசு கடிதங்களை பெறுவதாகவும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது போன்ற கோரிக்கைகள் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் , அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தபோது ​​பல பரிந்துரை கடிதங்களை வழங்கியதாகவும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இது போன்ற கோரிக்கைகளை பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நான் அமைச்சராக இருந்தபோது பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது குறித்து பரிசீலிக்கக் கோரி எனக்கும் கடிதங்கள் வந்திருந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது ஒரு சாதாரண நடைமுறை என்றும் புதிதாக ஒன்றும் இல்லை என்றும், தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபரைத் தீர்மானிக்கிறார் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.