Header Ads



வாக்கெடுப்பின்றி ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு, இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த பாடுபடுவார்


தற்போதைய பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, நிரந்தர அதிபர் பதவிக்காக நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால், 140 எம்.பி.க்கள் என்ற அதிக வாக்குகளைப் பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுடன் இது தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இறுதி நேரத்தில், வாக்கெடுப்பின்றி அனைவரது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக நியமிக்கப்படுவார் என நம்புவதாக அவர் கூறினார்.

ஐம்பது வருட அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்க இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கும் ஆசியாவின் பெருமை மிகு நாடாக மாற்றுவதற்கும் பாடுபடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1 comment:

  1. மேலே குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருக்கு தலையில் எதுவும் இல்லை என்பதும் ஏன் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வளவு பெரிய தோல்வியை அடைந்த காரணமும் இப்போது தௌிவாகத் தெரிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.