Header Ads



ஜனாதிபதி ரணில் இதனை, நினைவில் வைத்திருக்க வேண்டும் - சந்திரிக்கா


 இலங்கையின் பெரும்பான்மையான பிரஜைகளின் ஆதரவுடன் இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால் இந்த மாற்றம் சாத்தியமானது என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்வார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“இலங்கையின் 8வது ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

முன்னொருபோதும் இல்லாத சவால்களின் பிடியில் எங்கள் நாடு சிக்கியுள்ள தருணத்தில் அதன் ஆட்சிபொறுப்பை ஏற்கின்றார். இலங்கையின் பெரும்பான்மையான பிரஜைகளின் ஆதரவுடன் இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால் இந்த மாற்றம் சாத்தியமானது என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்வார் என்பதில் எனக்கு சந்தேகமும் இல்லை.

அவர்களின் கடுமையான அழைப்பு மக்களின் நலனிற்கான ஆட்சிக்கானதே தவிர,தனது நலனிற்கான ஆட்சிக்கானதல்ல சட்டத்தின் ஆட்சி நேர்மை நல்லாட்சி நிலவும் ஆட்சிக்கானதே அவர்களின் குரல்கள் ஊழல்களில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளிற்கு எந்த இடமும் அளிக்காத அரசாங்கத்திற்கானது.

இது மிகவும் கடினமான சவால், இதற்கு புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் சிவில் சமூக தலைவர்கள் தீவிர பங்களிப்பை செய்யவேண்டும். இது எங்கள் வரலாற்றில் தீர்க்கமான தருணம்.

இலங்கைக்கு தங்கள் இதயத்தில் தொலைநோக்கும் தாராளமனப்பான்மையும் கொண்ட தலைவர்கள் தேவை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.