Header Ads



டலஸின் ஆதரவு உயருகிறது, தொழில் வல்லுநர்களுடன், நாடாளுமன்றத்திற்கு புதிதாக சென்றவர்களும் அவரை ஆதரிக்க தீர்மானம்


தொழில் வல்லுநர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு புதிதாக வருகை தந்துள்ளவர்கள் டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஊடகங்ளுக்கு இன்று -19- கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மோசடி மற்றும் ஊழலற்ற ஒருவரே நாட்டை வழிநடத்த வேண்டும். மேலும், அழகப்பெரும அத்தகைய பண்புகளை கொண்டவர்.

அடுத்த 18 மாதங்களில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான தனது திட்டங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அழகப்பெருமவால் தேவையான வாக்குகளை விட சுமார் 20 வாக்குகளை அதிகம் பெற முடியும் என தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. இவை அனைத்தையும் வாசித்துவிட்டு பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரையும் இந்த பாரதூரமான விடயத்தில் நம்பவே முடியாது என்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்து உண்மை என்பது உறுதியாகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.