Header Ads



காலி முகத்திடல் 'அரகலய' போராட்டக் குழு - ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடல்


காலி முகத்திடல் “அரகலய" போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று (18) கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, எதிர்வரும் புதன்கிழமை (20) புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில், “அரகலய” பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அத்துடன், அவர்கள் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் தமது கருத்துக்களையும், தாம் கொண்டிருக்கும்  திட்டங்களையும் வெளிப்படுத்தியதோடு, அது தொடர்பான ஆவணத்தையும் கையளித்தனர்.

தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளுடன் “அரகலய” போராட்டக் குழுவினர் நடாத்தி வரும் பேச்சு வார்த்தையின் ஒரு கட்டமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

1 comment:

  1. இது ஒரு நல்ல உதாரணம். அரகலய சார்ந்தவர்கள் அனைவரும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும். அந்த உரையாடல்கள் மூலமாக அவர்களுக்கு ஒரு நல்ல நீடித்து பலன்கொடுக்கும் இலக்குகளை வகுத்துச் செயற்படலாம். அந்த செயற்பாடு இறுதியில் நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நிச்சியம் பயன்படும். எனவே உங்கள் கலந்துரையாடல்களைத் தொடரவும் அவற்றில் சிறந்த பலன்களை அடைந்து கொள்ளவும் எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.