Header Ads



அமெரிக்க தூதுவர் ஜூலி, கோட்டாபயவுக்கு மன அழுத்தங்களை கொடுத்தார் - கண்டுபிடித்தார் வீரவன்ச


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வாரத்துக்கு மூன்று தடவைகள் அமெரிக்க தூதுவரை சந்தித்து வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று -27- உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று மன ரீதியான அழுத்தம் கொடுத்து விடயம் சாதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.

அந்த வகையிலேயே இராணுவத்திடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று கோரப்படுகிறது.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தினார்.

இதேவேளை போராட்டவாதிகள் சிலர் இருந்தபோதும் இன்று அந்த இடத்தில் அராஜவாதிகள் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த அராஜவாதிகளிடம் இருந்து இலங்கை அரசை காப்பாற்றவேண்டும். இதன் காரணமாகவே தாம் அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

1 comment:

  1. Three days for Julie chung
    The rest four days for Gnana Akka.

    ReplyDelete

Powered by Blogger.