Header Ads

தானிஸ் அலிக்கு ஓகஸ்ட் 5 வரை விளக்கமறியல் - 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட டனிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில் இருந்து, நேற்று (26) மாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஓகஸ்ட் 1ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டுபாய் நோக்கி நேற்று புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்ட்டார்.

அதன் போது, பயணிகள் அதிர்ச்சியடைந்ததுடன், அது குறித்த வீடியோவை வெளியிட்டு தங்களது அதிருப்தியையும் வெளியிட்டிருந்தனர்.

தான், நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என்றும், சர்வதேச சமூகத்துக்கு போராட்ட எதிர்ப்புச் செய்தியை எடுத்துச் செல்வதற்காகவும் ஐ.நா.விடம் வழக்கை முன்வைப்பதற்காகவும் வெளிநாட்டுக்கு பயணிப்பதாக டனிஸ் அலி குறிப்பிட்டார்.

தலைமுடியை வெட்டி மற்றும் தாடியை சவரம் செய்திருந்தமை குறித்து வினவியபோது, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கோரிக்கைக்கு அமையவே அவ்வாறு செய்ததாக டனிஸ் தெரிவித்தார்.

ஜூலை 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை, நேரடி ஒளிபரப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பை சிறிது நேரம் இடைநிறுத்த வற்புறுத்தியமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது குறித்த மூன்று குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த டனிஸ் அலியை இன்று மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஜனவரி 27, 2020 முதல் கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் 19 இன் விளைவாக மிகுந்த மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அனுபவித்த அதிருப்தியடைந்த மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு திறப்பைக் கொடுத்த போராட்டம் என்று அழைக்கப்படும் மனப்பாடம் " ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் வியாபாரிகள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, ஊழல் அரச அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, "அரகாலை" தேசத்திற்கு காட்டியதைச் செய்து தெருக்களில் இறங்கினார். அதிகாரிகள் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவது நிலைமையை மேலும் மோசமாக்கியது மற்றும் ஜே.வி.பி மற்றும் எப்.எஸ்.பி போன்ற தீவிரவாத குழுக்களுக்கு 2020 மார்ச் 9 முதல் நடந்த அனைத்து வன்முறைகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்க தங்கள் அனுதாபிகளை இணைக்கும் சூழலை உருவாக்கியது. ஜே.வி.பி மற்றும் எப்.எஸ்.பி./தீவிரவாத சிந்தனைகளை அனுதாபிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், "அரகலயா"வின் வெப்பத்தை நிலைநிறுத்துவதற்கான அனைத்து சட்ட ஆதரவையும் இலவசமாக வழங்கியது. ஜாமீன் விண்ணப்பத்தில் சட்டப்பூர்வமான கைதுகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அவர்களின் "சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் திரும்புவதற்காக. வருத்தம் தெரிவிக்கிறேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தக் குற்றவாளிகளின் மனநிலையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார், மேலும் தொடக்கத்தில் துளிர்விடவில்லை". உண்மையாகவே அவர் அதற்கான விலையைக் கொடுத்தார். ஆனால் கோட்டாபேயும் அதைச் சிறிதும் செய்யத் தவறிவிட்டார் (கடந்த 31 மாதங்களில் அவர் வாக்குறுதியளித்தபடி அனைத்து ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களையும்) சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்கவும், இது உங்கள் அரகல்யா அல்ல TH, இது அதிக ஆழமான ஈடுபாடுகளைக் கொண்டுள்ளது. எந்த புதிய அரசியல் சக்திகள் நாட்டைப் பொறுப்பேற்றாலும், எழுப்பப்படும் மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் இருப்பது மக்களின் உரிமை. நேற்றைய அவசர விவாதத்தின் போது, ​​சில எம்.பி.க்களால் உண்மையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வெளிப்பட்டது, ஆனால் அதற்கு மேலும் உள்ளது. தற்போது நடந்துள்ள சில கைது சம்பவங்கள் அந்த வெளிப்பாடுகளை உறுதிப்படுத்துகின்றன. 2022 மார்ச் 22 முதல் எழுத்தாளர் பல சந்தர்ப்பங்களில் பொறுப்பானவர்களின் கவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தமிழிலும் பல யூட்யூப் சேனல்களால் ஆதரிக்கப்படும் கலவரக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடையே மிகவும் ஆபத்தான "தூண்டுதல்/தூண்டுதல்" மனநிலையை விளையாடும் ஒரு குறிப்பிட்ட மீடியா டிஜிட்டல் சேனலின் செயல்பாடுகள் குறித்தும் எழுத்தாளர் எச்சரித்திருந்தார். குறைந்த பட்சம் 69 இலட்சம் வாக்காளர்கள் கேட்கும் அனைத்து பதில்களையும் ஜனாதிபதி ரணிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமும் கண்டறிந்து குற்றவாளிகளை குறுகிய காலத்திற்குள் சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்று பொது மக்கள் இப்போது உணர்கிறார்கள்.
    Noor Nizam - நூர் நிசாம் - சமாதானம் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட், "முஸ்லிம் குரல்" அழைப்பாளர், தேசப்பற்றுள்ள குடிமகன்.

    ReplyDelete
  2. The memorization of the so-called protest that gave an opening to the disgruntled people, especially the youth who had gone through so much stress and tension as a result of the COVID 19 during the last two years since January 27th., 2020 followed by "the man made economical crisis" created by the CORRUPT GOVERNMENT OFFICIALS in connivance with corrupt politicians, corrupt businessmen, drug lords and religious leaders, to come out to the streets making what the "ARAGALAYA" has shown the Nation. The closing of all universities by the authorities had further aggravated the situation and created an atmosphere for the extremist groups such as the JVP and the FSP to tune-up their sympathizers to give the leadership for all the violence that occurred since March 9th, 2020. Sad to say, the Bar Association of Sri Lanka who has many sympathizers of the JVP and FSP/extremist thoughts, provided all the legal support to up-hold the heat of the "Aragalaya" free of charge so that the so-called protest hooligans were released from lawful arrests on bail application to get back to their "unlawful activities. Sad to say - President Gotabaya Rajapaksa failed to understand the mentality of these culprits and did "NOT" nip the bud in the beginning. Truly he paid the price for that. But Gotabay also failed to do that little bit (bring all the corrupt officials and government servants as he promised during the last 31 months) before the law and punish them. THIS WAS NOT JUST AN ARAGALYA OF THE YOUTH, IT HAS MORE DEEP INVOLVEMENTS. What ever new political powers may take charge of the country, it is the RIGHT of the people to have answers to the above questions raised. During the emergency debate yesterday, only a small fraction of the truth was revealed by some MP's, but there is more to it. The few arrests that have taken place confirm those revelations. The writer has been calling the attention of those responsible in many occasions since March 22nd., 2022, but with no available. The writer had also warned about the activities of a particular media digital channel on YouTube that was playing a very dangerous "instigating/rousing" mindset among the so-called rioters, supported by many other YouTube channels in Tamil too. At least the general public feel now that President Ranil and the SLPP government will be able to track down all the answers asked by the 69 lakhs of voters and bring to book the culprits, within a short time.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice", Patriotic Citizen.

    ReplyDelete

Powered by Blogger.