Header Ads



கோட்டாபய வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி


பதில் ஜனாதிபதியாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிட்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய நான், இலங்கைக்கு வெளியே இருப்பதன் காரணமாக சனாதிபதிப் பதவிக்குரிய தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் இயலாதெனக் கருதுவதனால், நான் இலங்கைக்கு வெளியே இருக்கும் கால எல்லைக்குள் சனாதிபதிப் பதவியின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் பிரயோகிப்பதற்கும் புரிவதற்குமாக இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 37(1) ஆம் உறுப்புரையின் கீழ், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களை, 2022, யு{லை மாதம் 13 ஆந் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு இத்தால் நியமிக்கின்றேன்.



கோட்டாபய ராஜபக்ஷ,

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி.




No comments

Powered by Blogger.