Header Ads



மீண்டும் பரவுகிறது கொரோனா - சுகாதாரப் பிரிவு கடும் எச்சரிக்கை, நேற்று 72 பேர் கண்டுபிடிப்பு


இலங்கையில் கொவிட் வைரஸ் பரம்பல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 72 கொவிட் தொற்றாளர்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் வெளிநாடு சென்று திரும்பியோர் எவரும் இல்லை என்பதுடன் பெரும்பாலானவர்கள் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. 

பொது இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதன் ஊடாகவே கொவிட் வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மருத்துவ நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் இதுவரை 6,64,844 கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 99 வீதமானவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.