ஜனாதிபதி வாக்கெடுப்பின் போது, பணம் வாங்கியவர்கள் யார்..?
கூட்டமொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்ததால், 134 உறுப்பினர்கள் அரசாங்க தரப்பில் அமர்ந்திருப்பதை நாம் பார்க்க வேண்டும். ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் ரணிலுக்கு இரகசியமாக வாக்களித்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி நாடாளுமன்றம் கூடி அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதனை வெளிப்படுத்த முடியும்.
அவசரகாலச் சட்டத்திற்கான வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பு அல்ல, எனவே நான் இன்று உங்களுக்குச் சொல்கிறேன், இவர்கள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியில் இருப்பார்கள்.
அவர்கள் ஜனாதிபதி வாக்கெடுப்புக்கு பணம் வாங்கியுள்ளனர், இப்போது அது முடிந்ததால் அவர்கள் மீண்டும் எதிர்க்கட்சியில் அமர்வார்கள் என தெரிவித்துள்ளார்.
Post a Comment