Header Ads

மாதம் 50 மில்லியன் தருகிறேன் என்ற பெயரில் அமைச்சர் தம்மிக்க வந்துள்ளார், கோட்டாபயவின் மூளை சரியில்லை


 எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இன்றைய(03) ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்த கருத்துக்கள்.

அரசாங்கம் தற்போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பித்துள்ளது.21ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட சர்வாதிகார ஆட்சியை அகற்றிவிட்டு 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருமாறு இந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி 19 ஆம் திருத்தம் மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்போம் என்று கூறினார்.

இந்த அரசாங்கம் கொண்டு வந்துள்ள இருபத்தி இரண்டாவது திருத்தம் என்ன?  ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்குப் பதிலாக 19 அதிகாரங்களுடன் ஒப்பிடும் போது அது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவே உள்ளது. பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் 19 இல் இருக்கவில்லை, 22 இல் உண்டு. பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் படி அமைச்சரவையை நியமிப்பது என்ற 19 இல் உள்ள ஏற்பாடு திருத்தப்பட்டுள்ளது. 19 இல் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என கூறப்பட்ட நிலையில், தற்போது 22 இல் ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஜனாதிபதி கடந்த மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு சொன்ன கதை பொய்யானது,மக்களை தினமும் ஏமாற்றி வருகின்றார். அது மாத்திரமன்றி அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் செயற்படுகின்ற இடம் தான் அரசியலமைப்பு பேரவையாகும். கடந்த காலங்களில் அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் பரிந்துரைக்கும் ஏற்பாடு, நியமிப்பதில் இருந்தது.19 இல் இதற்கான சமநிலை இருந்தது. சபாநாயகர்  நியமிப்பதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என 22 இல்  கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இந்த அரசாங்கத்தால் ஏழு பேரும் மற்ற எதிர்க்கட்சி குழுக்களுக்கு மூன்று பேருமே நியமிக்க முடியும். அப்படியானால் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியையும் விஜேதாச ராஜபக்ஸவும் இந்நாட்டு மக்களையும் ஏமாற்றி விட்டனர்.

விஜேதாச ராஜபக்ஷ மகா சங்கத் தலைமை பீடங்களுக்குச சென்று பெரும் மத தலைவர்களுக்கு வழங்கியது அல்ல  வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.சங்ககைக்குரிய மகா தேரர்களையும் இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.  ஜனாதிபதி தனது அதிகாரத்தை தனது கைகளில் தொடர்ந்து வைத்துள்ளார்.

மக்கள் மத்தியில் உரையாற்றிய போதும் ஜனாதிபதி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு வாக்குறுதியளித்தும்,சிவில் அமைப்புக்களுக்கு வாக்குறுதியளித்தும் எதிர்க்கட்சியாக எங்களுடன் கலந்துரையாடும் போதும் நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிப்பதாக தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதி இன்று மக்களையும் மகாநாயக்க தேரர்களையும் ஏமாற்றி வருகின்றார்.அதனால் தான் சர்வ கட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு நான்கு மகா பிரிவினாவைச் சேர்ந்த மகா சங்கத்தினர் முன்வந்துள்ளனர்.அதாவது கோட்டா ரணிலின் அரசாங்கத்தை மகாநாயக்கர் நிராகரித்துள்ளார்கள்.அதாவது கோட்டா ரணில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதையே மகாநாயக்க தேரர்கள் கூற வருகின்றனர்.

வரிசைகள் இன்றும் மறைந்துவிடவில்லை, இன்று எரிபொருளில்லை, எரிவாயு இல்லை, பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன, எண்ணெய் விலை அதிகரிக்கின்றது, ராஜபக்சக்களை பாதுகாக்கும் வேலையை ரணில் விக்கிரமசிங்க செய்கின்றார். அதனால்தான் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் அறிவிப்பை மகாநாயக்க தேரர்கள் அறிக்கையாக நேற்று வெளியிட்டிருந்தனர். தற்போதைய அரசாங்கம் சர்வகட்சியல்ல, ஒரே ஒரு உறுப்பினரை மட்டுமே கொண்ட ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பொதுஜன பெரமுன குழுவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தார், ஆனால் அவரால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. சகலரும் இந்த ஆட்சியை மறுக்கிறார்கள்,கிட்டிய நாட்களில் மக்கள் வெளியே வருவார்கள்.பேராட்டம் வெடிக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இந்த வேளையில் நாட்டைக் காப்பாற்ற சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு மகாநாயக்க தேரர்கள் மற்றும் பிக்குகள் முன்வைத்த முன்மொழிவிற்கு எமது உடன்பாட்டைத் தெரிவிக்கிறோம்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கருத்திற் கொள்ளாத அரசாங்கமாக இருக்கிறது, வரிசையில் நின்று செத்து மடியும் காலம் வந்துவிட்டது, எண்ணெய் வரிசையில் இருந்த இருபதுக்கும் மேற்பட்டோர் இன்று இறந்திருக்கிறார்கள்,அதற்கு இந்த அரசாங்கம் தான் காரணம்.அரசாங்கத்தின் தவறே இது. மேலும், எரிவாயு சிலிண்டர்கள வெடித்து, ஏராளமான மக்கள் எரிவாயு வரிசையில் இறந்தனர், கோவிட் தொற்றுநோயால், பதினேழாயிரம் பேர் இறந்ததை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம், ஏனெனில் அவர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசி போடாததாலும், தேவைப்படும் போது நாடு முடக்கப்படாமலும்  இருந்தது.முகக்கவசம் அணியுமாறு கூறப்படவில்லை. இதற்கெல்லாம் கோட்டாபய ராஜபக்சவும் அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.இப்போது ஒரு மணித்தியாலத்திற்கு 4 பேர் இந்த அழுத்தத்தினால் மரணமடைவதாக ஒரு வைத்தியர் கூறுகிறார். மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் குறித்து அரசாங்கம் ஒன்றும் தெரியாதது போல் பார்த்துக் கொண்டிருக்கிறது.இன்று மக்கள் வீடுகளிலேயே செத்து மடிகிறார்கள்.கோட்டாபய ராஜபக்சவின் மூளை சரியில்லை.இப்போது இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன,இங்கே நாட்டு மக்கள்,பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் வரிசையில் இறப்பார்களோ தெரியாது.பொறுப்பற்று எதோச்சதிகாரமாக செயற்பட்ட வன்னமுள்ளார் ஜனாதிபதி.

இராஜினாமா செய்யாமல் அமைச்சரவையை நீக்கிவிட்டு அதன்பின் தற்காலிக அமைச்சரவையை நியமித்து ரணில் விக்கிரமசிங்கவை வைத்து வேறு கூடாரம் போட்டார்.அன்மையில் அந்த அமைச்சரவையில் தம்மிக்க பெரேரா என்ற வர்த்தகர் இடம் பெற்றுள்ளார்.யார் இந்த தம்மிக பெரேரா.பல்வேறு வனிக நிறுவனங்களை கொண்டு நடத்தும் ஒருவர் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். மாதம் 50 மில்லியன் தருகிறேன் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்நாட்டை ஏன் இந்த நிலைக்கு தள்ளினீர்கள்?

இந்த அரசாங்கம் வரிச்சலுகை வழங்கியதால், கையிருப்பில் இருந்து பணத்தை எடுக்க வேண்டியதாயிற்று, இந்த வரிச்சலுகைகளால், நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. வரிச் சலுகைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 700 மில்லியன் தேசிய வருமானத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இந்த வரிச்சலுகைகளில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் 3,000 மில்லியன் வரிச் சலுகையை தம்மிக்க பெரேராவே பெற்றுள்ளார் என்று நான் கூறுகிறேன்.

பொட்டனிக்கணக்கில் வரிச்சலுகை மூலம் இலாபம் பெற்று தற்போது மாதம் 50 மில்லியன் தருவதாக கூறுகிறார்.இவர்களுக்கு இந்த வர்த்தகர்களுக்கு இத்தகைய வாய்ப்பை வழங்கியது இந்த அரசாங்கம்தான் என்று கூறுகிறோம்.

இன்று நாட்டு மக்களிடம் பாவனைக்கேற்ற போதிய எண்ணெய் இல்லை, பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது, ஆனால் இதையெல்லாம் மக்களே அநுபவிக்க நேரிட்டுள்ளது. ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதை, ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஊடகம் என்பது ஒரு நாட்டின் சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, நாட்டிற்கு அடுத்தபடியாக நவீன அபிவிருத்தியடைந்த உலகில் ஊடகங்களே நான்காவது தூணாக உள்ளன.

ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள்  வழங்கப்படுவதில்லை.ஊடக சுதந்திரம் மறைமுகமாக நசுக்கப்படுவது ஏன்?பெருந்தொகையான சமூக ஊடக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே. சமூக வலைதளங்கள் மூலம் அரசு குறித்த தேவையான தகவல்களை தெரிவிக்கும் போது, ​​சமூக வலைதளங்களை முடக்க  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி உள்ளது.அவ்வாறு சமூக ஊடகங்களை முடக்க அரசாங்கம் தலையிட்டால் அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி போராடுவது மட்டுமன்றி சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு கைது செய்யப்படும் பட்சத்தில் உரிய சட்ட உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளோம்.

இன்றைய அரசால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை, எனவே சர்வ கட்சி அரசை நிறுவி பல கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பயணத்தை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியாக இன்று முன்வந்துள்ளோம்.

இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, இந்நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவின் கோட்டா ரணில் அரசாங்கத்தை நம்பவில்லை என்பதை நாம் இன்று அறிவோம்.

சர்வதேசம் ஏன் உதவி செய்யவில்லை?இந்நாட்டில் நடந்த ஊழல்,மோசடி,திருட்டு அனைத்தையும் மேற்கொண்டது யார் என்பதை அறிவர்.மக்கள் ஆதரவற்ற ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் சர்வதேசத்திற்கு தெரியும். ஜப்பான் தூதுவர் இந்நாட்டுக்கு உதவிகளை வழங்கமாட்டோம் என்றார்.ஆனால் இந்த நாட்டுக்கு உதவிகளை வழங்குவது எமக்கு பிரச்சினை என ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார்.ரணில் பிரதமார வந்த பிறகு எந்த நாட்டிலிருந்து உதவிகள் கிடைத்தன என கேட்கிறோம்.

இன்று இந்த அரசாங்கத்தில் உள்ள ராஜபக்ஸ ரணில் அரசை உலக நாடுகள் எதுவும் நம்பவில்லை.இப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை.சர்வ கட்சி அரசை நிறுவி சர்வதேச நம்பகத்தன்மை ஏற்படுத்தி உதவிகளை பெறும் நடவடிக்கைக்கு செல்லாம்.பணம் அச்சடித்து அச்சடித்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.ரணில் விக்ரமசிங்க டிரிலியன் கணக்காக அச்சடிக்கிறார்.இது தீர்வல்ல.ஜனாதிபதி பதவி விலகி சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதே சிறந்த தீர்வாகும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.