Header Adsஅன்று இலங்கைக்கு உதவிய முஸ்லிம் நாடுகள், இன்று தூர விலகியது ஏன்..? இம்தியாஸ் Mp இன்று சொன்ன ஒரு சம்பவம்


இன்றைய (26) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்.

இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் நோக்கம் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினை தொடர்பாகவோ நாட்டில் நிலவுகின்ற கவலைக்கிடமான நிகழ்வுகள் தொடர்பாகவோ உங்களுக்குத் தெளிவு படுத்துவது அல்ல. உங்களுடைய பத்திரிகைகள், ஊடகங்களில் அவ்வாறான செய்திகள் நிறைந்துள்ளன. உண்மையில் எமது நாட்டிற்கு ஏன் இவ்வாறான ஒரு நிலைமை உருவாகியது. ஆசியா கண்டத்தில் இவ்வாறு எந்த ஒரு நாடும் வீழ்ச்சி அடைய வில்லை. இலங்கை மாத்திரம் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்தது. ஏன் இவற்றுக்கு முகம் கொடுக்க நேரி்ட்டது. உங்களுக்கு நினைவிருக்கும் கலந்துரையாடல்களில் மேற்கோள் காட்டப்படும் நோபல் பரிசு வென்ற இந்தியாவின் அமிர்த யா சிங்கின் கூற்று. மிகப் பிரபலமடைந்த பிரசித்தமான கூற்றாக அந்த கூற்று காணப்படுகிறது. அவர் கூறியது என்னவென்றால் “ஜனநாயக நாட்டில் எந்நிலையிலும் பஞ்சம் ஏற்படாது” என்றாகும். அவருடைய கூற்றை பொய்யாக்கும் பொய்யாக்கிக் கொண்டு இருக்கின்ற நாடாக நாம் மாறி உள்ளோம். நாம் இன்று உணவு பற்றாக்குறைக்கு முகம் கொடுத்துள்ளோம். பஞ்சத்திற்கு முகம் கொடுத்துள்ளோம். 

ஜனநாயக நாட்டில் பஞ்சம் ஏற்படாது என அமிர்தியா சிங் தெரிவித்தார்.அதற்கான காரணம் தான் மக்களுடைய குரல் எந்நேரமும் ஒலிக்கும் அவற்றுக்கு செவிமடுக்க வேண்டிய நிலைமை உருவாகும். எமது நாட்டில் கடந்த தினங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளாக மாறின. விவசாய பிரச்சினை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்வுகள் துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகள், விவசாயிகளின் ஆலோசனைகளை மதிக்கமால் மேற்கொள்ளப்பட்டதால் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தோம். அரசு பதவி ஏற்ற போது வரி சலுகை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நான் விரிவாக பேச வேண்டியதில்லை இவை பத்திரிகைகளை நிரப்பிய செய்திகளாகும். 

ஆனால் இவ்வாறான நிலைமையினால் முழு சமூகமும் நிதானம் இழந்த நிலையில் காணப்படுகிறது. மக்கள் மன உழைச்சலில் வாழ்கின்றனர். எந்நேரத்தில் இது ஒரு கிளர்ச்சியாக வெடிக்கும் என்பது தெரியாத நிலைமையில் உள்ளோம். அடுத்த நாள் தொடர்பாக எவ்விதமான நம்பிக்கையும் விசுவாசமும் அற்ற நிலையில் காணப்படுகின்றனர்.மிகப் பாரிய கிளர்ச்சியை உண்டு பண்ணலாம். இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நாம் இன்னும் சரியானவர்களே எனவே எண்ணுகின்றார்கள். அது மிகக் கவலைக்கிடமான நிலைமையாகும். கண்களை மூடி மக்களை ஏமாற்ற முடியுமா?

எமது அண்டைய நாடான மாலைதீவை எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதுள்ள ஆட்சிக்கு முன்னர் மிகக்குறுகிய காலம் ஆட்சி செய்த ஆட்சியை நோக்குங்கள்.மோசடியின் பக்கம் சாய்ந்து இருந்தது, சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனால் உலகில் கூனிக் குறுகிய நாடாக மாறியது. ஆனால் அதற்குப் பின்னர் வந்த அரசு நம்பிக்கையை கட்டி எழுப்பியது. எமது நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது. முறையான பொருளாதார முடிவுகள், பொருளாதார நகர்வுகள், உடன்படிக்கைகள், மனித உரிமை மீறல் செயற்பாடுகள் போன்றவற்றின் மூலம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக நாம் மாறியுள்ளோம்.கூனிக்குறுகுகின்ற நிலைமை உருவாகி உள்ளது. எமது நேச நாடுகள் எம்மை விட்டு விலகினர்.ஜப்பான் போன்ற நாடுகளை குறிப்பிடலாம். மக்கள் பணத்தை களவாடும் உடன்படிக்கைகளினால் அந்நாடுகள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டு எம்மை விட்டும் விலகினர். 

மத்திய கிழக்கு நாடுகள் எம்மை விட்டும் ஒதுங்கினர். கடந்த தினங்களில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதன் ஒரு பிரதி நான் இன்று உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு அறியப்படுத்த விரும்புகிறேன். நாட்டிலிருந்த மிகப்பிரபலமான ஊடகவியலாளர் தான் லத்தீப் பாரூக் உங்களுக்கு அவரை பற்றி தெரிந்திருக்கும். அவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள கல்ப் நிவ்ஸ் என்று அழைக்கப்படும் பிரதானமான பத்திரிகையில் பிரதான ஆசிரியராக செயலாற்றினார். அவர் பிரதான ஆசிரியராக இருந்த வேளையில் இலங்கையின் பல எழுத்தாளர்களை அப்பத்திரிகை உடன் தொடர்பு படுத்தினார். அவர் அது தொடர்பாக கடந்த தினத்தில் ஊடகவியலாளர்களுடன் தமது அனுபவப் பகிர்வொன்றை நிகழ்த்தி இருந்தார். அவர் அப்போது தெரிவித்த கூற்றின் ஒரு பகுதி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தது. நான் விரும்புகிறேன் அவற்றின் ஒரு பகுதியை உங்களுக்கு மேற்கோள் காட்ட. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையின் போது இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அவர் குறிப்பிட்டார். நான் இப்போது அவர் கூறிய விடயத்தை மேற்கோள் காட்டுகிறேன். “அக்காலத்தில் இடம்பெற்ற மத்திய கிழக்கு யுத்தத்தின் போது இலங்கை நாட்டிற்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது இலங்கை வங்கியின் தலைவராக கடமையாற்றியவர் ஜஹான் காசின் அவர்கள், அவர் முன்னைய ஜனாதிபதி ஆர் பிரேமதாச அவர்களுக்கு மிக நெருக்கமானவர். ஜனாதிபதி அவர்கள், அவர் ஊடாக ஈராக் தூதுவரை சந்தித்து கலந்துரையாடுமாறு தெரிவித்திருந்தார். நாம் தூதுவரை சந்தித்து ஜனாதிபதியின் வேண்டுகோளை தெரிவித்தோம் அப்போது ஜனாதிபதியை சந்திப்பதற்கு அவர் இணங்கினார். அதற்குப் பின்னர் நானும் ஜஹான் காசிம் அவர்களும் ஜனாதிபதியுடன் ஈராக் தூதுவரை சந்திக்க சென்றோம். ஆர் பிரேமதாச ஜனாதிபதி அவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை தெரிவித்து எனக்கு எரிபொருள் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். ஈராக் தூதுவர் அவர்கள் தமது நாட்டின் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவருடன் கலந்துரையாடினார். அடுத்த தினமே வேறொரு நாட்டுக்கு அனுப்பப்படவிருந்த எரிபொருள் ஏற்றிய இரு கப்பல்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு அவை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சில தினங்களிலேயே இலங்கைக்கு கப்பல்கள் வந்து சேர்ந்தன. பணம் செலுத்தப்படவில்லை, எல்.சீ திறக்கப்படவில்லை. அக்காலத்தில் முஸ்லிம் அரபு நாடுகள் இலங்கையுடன்  கொண்டிருந்த நட்பின் விளைவாக இவ்வாறே உதவினர்.”

தற்போது இவ்வனைத்து நாடுகளும் எங்களது முட்டாள்தனமான நடவடிக்கைகளினால் எம்மை விட்டு தூரமாக உள்ளனர். ஜப்பான் போன்ற நாடுகளை எமது மோசடி, களவு கொள்ளைகளினால் எம்மை விட்டும் தூரமாக்கி உள்ளோம்.

மனித உரிமைகள் மீறப்பட்ட, ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படல் போன்ற நிகழ்வுகளினால் ஜனநாயகமற்ற நாடாக எம் நாடு மாறியதன் மூலம் உலகில் உள்ள ஜனநாயக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் தூரமாகியுள்ளன. இப்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசை கூட அவ்வாறான மோசடி ஜனநாயகமற்ற ஆட்சியின் தொடராகவே உலகு எம்மை நோக்குகிறது.

நம்பிக்கை ஆற்றல் நிலைமை நமக்குள்ள சவாலாகும். அந்த நம்பிக்கையை கட்டி எழுப்பது இன்றைய தேவையாகும். அதனால்தான் எமது நாடு பூராகவும் இடம்பெற்ற கிளர்ச்சியின் உச்ச கட்டத்தை நாம் அடைந்திருந்தோம்.நிதி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். பிரதமர் தமது பதவியை இராஜினாமா செய்தார், நாட்டின் தலைவர் இன்னொரு முறை தேர்தலில் போட்டி போடுவதில்லை எனவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் எனவும் பிரசித்தமாக அறிவித்திருந்தார். அடுத்து நிகழ்ந்தது என்ன? தமக்கு சொந்தமான பத்திரிகைகளில் தன்னை விடுவிக்கக் கூடியொறுவரை உருவாக்கினார்கள். ஓரிரு தினங்களில் அதிசயத்தை நிகழ்த்துவதாக மக்கள் மனதில் நம்பிக்கையை கட்டியெழுப்பினர். இன்று என்ன நடந்திருக்கிறது?எவற்றை நாம் பெற்றுக் கொண்டோம்? எவ்வளவு காலம் கடந்துள்ளது. எமக்கு அந்நாடுகள் வெறும் பேச்சுகளை மாத்திரமே தந்துள்ளன. மக்கள் எதிர்காலத்தில் முகம் கொடுக்க வரும் பிரச்சினைகளை மாத்திரமே பேசுகின்றனர்.

மக்கள் வேண்டுகோள்களை நிறைவேற்றுகின்ற சர்வகட்சி அரசு ஒன்றை உருவாக்கவிருந்த இறுதித்தருவாயில் அம்முடிவை மாற்றினார்கள்.

நிபந்தனைகளின்றி இந்நிலையிலிருந்து மீட்டெடுக்க ஒருவர் நியமிக்கபடுகிறார். எனக்கு உங்களைப் பிரச்சினையில் இருந்து மீட்க முடியும், எனக்கிருக்கும் தொடர்புகள் மூலம் இப்பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனவும், பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கான வழிமுறையை வகுக்க முடியும், தம்மை ஆதரிக்கின்ற தன் சொல்படி நடக்கும் என்ற ஊடகங்களின் மூலம் பாரிய மாயையான பிரதபிம்பம் ஒன்றை கட்டியெழுப்பினர்.

மக்களை ஏமாற்ற முடியாது. நாம் ஒரு முக்கியமான திருப்புமுனையை சந்தித்திருக்கிறோம். நாம் சமூகமாக இணைந்து துன்பத்திலும் இன்பத்தை பெற்றுத்தர முடியுமான உரிய தீர்வைப் பெற வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இவ்வாறான தருணத்தில் இது ஒரு இலகுவான விடயமல்ல. ஆனால் உலகின் நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். உலக நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று சீனாவை நோக்குங்கள்.துணிச்சலான முடிவைகளை எடுத்த அதன் விளைவைப் பாருங்கள். ஒரு கம்யூனிச நாடு, தமது கம்யூனிச சிந்தனைகளை மறந்து இலாபத்தை இலக்காகக் கொண்ட நிதி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. அந்நாட்டில் வாழ்ந்த கொம்யூனிஸ்ட்வாதிகள் இவ்வாறான தீர்வுகள் பெறப்பட்டால் தமது மாக்சிச வாதம் முற்றுப் பெற்றுவிடும் என தெரிவித்த போது ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார், இலாபத்தை இலக்காகக் கொண்ட நிறுவனங்களுக்காக நாட்டை திறந்து வைத்தார். இன்று அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாடுகளுக்கு தமது உற்பத்திகள் மூலம் சவால் விடுகிறது, தனது பொருளாதாரத்தின் மூலம் சவால் விடுக்கிறது சீனா. இன்று ஒரு மகா சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. 

இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள், நேருவின் காலத்தில் சோசலிச கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட போது உலகின் இலாபநோக்கற்ற நிறுவனங்கள் தமது நாட்டை திறந்து வைப்பதாக முடிவெடுத்தார்கள். இவ்வாறான கொள்கைகளில் அவர்கள் முடங்கி கிடக்கவில்லை, துணிச்சலான முடிவுகளை எடுத்தார்கள். சர்வதிகார ஆட்சியை இன்று உலகு ஏற்பதில்லை. இன்று உலகில் வாழக்கூடிய இளைஞர்கள் ஏற்பதில்லை. இவர்கள் இவ்வாறான சிந்தனையுடைய சமூகத்தில் வாழ விரும்புவதில்லை. இவர்கள் கல்வி அறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள். நாம் இதை உணரவேண்டும். இவ்வாறான துன்பங்களிலிருந்து இன்பத்தை பெற்றுக்கொள்வதற்கான துணிச்சலான முடிவுகளை எடுத்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டும். பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசியல் ரீதியான மறுமலர்ச்சி இவ்விரண்டையும் ஏற்படுத்தும் விதமாக நாம் செயற்படவேண்டும். 

என்ன நடந்திருக்கிறது? சர்வாதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கான 21 ஆவது சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்காக நாம் கலந்தாலோசித்திருந்தோம், ஆனால் தம்மைக் காக்க வந்தவன் என்று அவரது சேவையை முற்படுத்தி இவற்றை பின்நடிக்கின்றனர். சர்வ கட்சி ஆட்சியொன்றை நிறுவுவதற்கு இருந்த கடைசி தருணத்தில் நம்மை மீட்பவர் என்ற மகுடம் தாங்கியவரின் சர்வ ஆட்சியை அல்ல எல்லா கட்சிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொண்ட ஒரு ஆட்சி நிறுவப்பட்டது.

மென்மேலும் மக்களை ஏமாற்ற வேண்டாம்.மக்களின் எதிர்காலத்தில் சிறுவர்களின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம். பாருங்கள் நாட்டின் நிலைமையை எரிபொருள் பற்றாக்குறை உணவின்றி, நினைத்த பயணத்தை செல்ல முடியாத நிலைமை,வரிசையில் காத்திருக்கும் அதனால் உறவுகளை சந்திக்க முடியாத நிலையுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுவதில்லை. எமக்கு இவ்வாறான பிரச்சினைகள் இருந்தபோதும் எமது நாட்டில் நாம் ஜனநாயகத்தை நாடுகின்ற ஜாதக ரீதியான ஆட்சியை நடைமுறைப்படுத்த கொள்கிறோம். இது முன்னர் இருந்த ஆட்சி தொடர்ந்தால் என்பதை உலகுக்கு காட்டினோமெனில் சரியான பாதையில் பயணிக்கலாம். 

ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிக்கே ஆயுள் அதிகமாக உள்ளது என்பதையும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொள்ளாத ஆட்சிக்காலம் தோன்றியது என்பதும் சர்வதேச நிறுவனங்களுக்கு தெரியும். இந்நிலை தொடருமானால் சர்வதேச நிறுவனங்களின் உதவி நமக்கு கிடைக்கப்போவதில்லை. இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை மாத்திரம் பிரசவிக்காமல் நாட்டின் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவோம் என ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டை சரியான வழியில் பயணிக்கச் செய்வோம் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.