Header Ads



"நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக விவசாயம் செய்ய வேண்டும்"


உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம் எதிர்காலத்தில் உலக உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதற்கமைய, அந்நியச் செலாவணி இல்லாத இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் கடும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அப்போன்சோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் பொருளாதாரம் முழுமையாக உடைந்து விழும் நிலைமை காணப்படுகின்றது. தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும், கடைகள், உணவகங்கள் மூடப்படும். உணவு இல்லாமல் போய்விடும்.

அடுத்தவர் மீது குற்றம் சுமத்தி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் உடனடியாக நடவடிக்கை ஒன்றை எடுக்க வேண்டும்.

இதற்கு முகங்கொடுக்கும் வகையில் மக்களை விவசாயம் செய்யுமாறு வழிகாட்ட வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அப்போன்சோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.