இருப்பதைப் பகிர்வோம்"- கோட்டா கோ கமவில் உதவித்திட்டம்
'இருப்பதைப் பகிர்வோம்' என்ற தொனிப்பொருளில் கோட்டா கோ கமவில் போராட்டக்காரர்களால் உதவித்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தங்களிடம் இருக்கும் மேலதிக பொருட்களை கொண்டு வந்து இங்கு கையளித்து விட்டு தங்களுக்கு விரும்பிய இன்னொரு பொருளை எடுத்துச் செல்ல முடியும்.
இத்திட்டத்தின் முன்னோடித் திட்டம் அண்மையில் மாத்தறை கோட்டா கோ கமவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அங்கு திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயற்படுவதை அடுத்து காலிமுகத்திடல் கோட்டா கோ கமவிலும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிப்பை எதிர்கொள்ளும் ஏழைகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
Post a Comment