Header Ads



இன்னும் 6 மாதங்களுக்குள், 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை - ரணில்


இந்த ஆண்டு கடன்களை மீள செலுத்துவதற்கும், வெளிநாட்டு ஒதுக்கத்துக்காகவும், 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்களை மீள செலுத்துவதற்காக 5 பில்லியன் டொலரும், வெளிநாட்டு ஒதுக்கத்தைப் வலுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலரும் இவ்வாறு தேவைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த வணிக சங்கம், ஒளடத உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியாகும்போது, சர்வதேச நாணய நிதித்துடனான பேச்சுவார்த்தையை நிறைவுசெய்யக்கூடியதாக இருக்கும் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்தப் "பு"னாதானே எல்லாருக்கும் தெரியும்.
    நாட்டை கொள்ளையடிச்சவனுக்களுக்கிட்ட இருந்து திருப்பி எடுத்தாலே போதும். அத மொதல்ல செய்யுங்கோ சார். சும்மா "பு" கதைகளயே தொடந்து செல்லிக்கிரிக்காம

    ReplyDelete

Powered by Blogger.