ரஷ்யா விமானம் இலங்கையிலிருந்து, புறப்பட தடை - பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்
மொஸ்கோவ் நோக்கி பயணிக்கவிருந்த ரஷ்யா கொடியுடனான எரோப்லொட் (Aeroflot) விமானத்திற்கு, நீதிமன்ற உத்தரவு காரணமாக இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விமான குத்தகை நிறுவனத்துடன் நிலவும் பிரச்சினையை முன்னிறுத்தி இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விமானத்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக சிவில் விமான சேவைகள் அதிகார சபை சட்டமா அதிபருடன் கலந்துரையாடலை நடத்தி வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் Hiru க்கு தெரிவித்தார்.
Post a Comment