Header Ads



பாம்பு கடிக்கு மருந்தின்றி இதுவரை 20 பேர் மரணம் - Dr கிஷாந்த அதிர்ச்சி தகவல்


நாட்டில் பாம்பு விஷ தடுப்பு மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சில மருந்துகளுக்கு தற்போது பயன்படுத்தப்படும் மாற்று மருந்துகளும் அடுத்த 3 வாரங்களுக்குள் மருத்துவமனை களஞ்சியங்களில் இருந்து படிப்படியாக குறைவடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலை களஞ்சியங்களில் இருந்து 20 வீத மருந்துகளே வழங்கப்படுவதாகவும், அவையும் எதிர்வரும் காலங்களில் நிறைவடையவுள்ளதாகவும் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க சுட்டிக்காட்டினார்.

தற்போது வைத்தியசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு மாத்திரமே மருந்துகள் வழங்கப்படுவதாகவும் வயதான நோயாளிகளை விட இளம் நோயாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.