Header Ads



இந்த வருடம் முதல் இதுவரை 400,000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம், 70,000 பேர் மாத்திரமே வெளிநாடு சென்றனர்


இந்த வருட ஜனவரி மாதம் முதல் இதுவரை 400,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும் அதில் இதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாடு சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் விநியோகிக்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை தற்போது 2,400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சேவை ஊடாக 1,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதுடன் சாதாரண சேவையின் கீழ் 800 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.

அத்துடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் விண்ணப்பங்களை கையளிக்க முடியாதவர்களுக்கு பிறிதொரு தினம் வழங்கப்படுவதுடன் அவ்வாறு நாள் ஒதுக்கப்பட்டவர்களில் 600 பேரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் நாளாந்தம் விநியோகிக்கப்படுகின்றன. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எரிபொருள் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் பெருந்திரளானோர் பிரவேசித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.