Header Ads



பொருட்கள் சிலவற்றின் விலைகள் 100 சதவீதத்தினால் அதிகரிப்பு - நிதியமைச்சின் இன்றைய அறிக்கையினால் இலங்கையில் மேலும் நெருக்கடி


369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்று (01) முதல் அமலுக்கு வரும் வகையில் தளர்த்துவற்கு தீர்மானித்துள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அறிவித்துள்ள நிலையில், பல உற்பத்திகளுக்கு 100% கட்டண விகிதத்தையும் இன்று (01) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது.

உதாரணமாக, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது1000 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

யோகட் உட்பட பால் உற்பத்திப் பொருட்களுக்கும் மேற்குறிப்பிட்ட வரியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோக்களின் டயர்களது விலைகள் 50% உயர்த்தப்பட்டுள்ளன.

சலவை இயந்திரம், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், குளிர்சாதனப் பெட்டி, அலைபேசிகளின் விலைகள் 100% உயர்ந்துள்ளதுடன், ஏனைய மின்சாதனங்கள் 15% உயர்ந்துள்ளன.

அப்பிள் மற்றும் திராட்சை பழங்கள் மீதான இறக்குமதி வரி ஒரு கிலோகிராமுக்கு 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் மற்றும் கோகோ கொண்ட பிற உணவு தயாரிப்புகளுக்கு  200% மேலதிக வரியை  நிதி அமைச்சு விதித்துள்ளது.

No comments

Powered by Blogger.