Header Ads

ஒரு ராஜாங்க அமைச்சரின் வீடு, தீயிட்டு கொளுத்தப்பட்ட பின்னர் அவரின் மனக்குமுறல்


நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை, இரவு பகலாக கண்விழித்து கற்பித்து உழைத்து கட்டிய வீடு எரிகின்றது. இனி வாழ்நாளில் ஒரு போதும் அரசியலில் வரமாட்டேன் என குணபால ரத்னசேகர எம்.பி. பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நேற்றை (09-05-2022) வன்முறைச் சம்பவங்களின் போது ஆத்திரமடைந்த தரப்பினரால் அவரது வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே அவர் தனது பேஸ்புக் மூலம் தீயிட்டு கொளுத்தப்பட்ட தனது வீட்டையும் பதிவிட்டு மேற்குறிப்பிட்ட பதிவையும் இட்டுள்ளார்.

நேற்றைய சம்பவங்களில் குருநாகல் மாவட்டத்தில் பொதுச் சொத்துக்கள், அரசியல் வாதிகளின் வீடுகள் என பலவற்றுக்கும் தீ இடப்பட்டிருந்தது.

அத்துடன் தற்போது நாளை புதன்கிழமை -11- வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.